ADDED : பிப் 16, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் உப்பு சத்தியாகிரக பொன்விழா ஆண்டை முன்னிட்டு 1980ல் சிறிய கண்ணாடி சட்டத்தில் காந்தி படம் வைக்கப்பட்டது. 40 ஆண்டுகள் கடந்த நிலையில் படம் மாற்றாததால் பொலிவிழந்து மங்கி காணப்படுகிறது.
மியூசிய செயலாளர் நந்தாராவ் கூறியதாவது: மியூசியத்தில் புனரமைப்பு பணிகள் நடப்பதால் துாசி படர்ந்து மங்கி உள்ளது. முதல் மாடியில் இருந்த காட்சிக்கூடம் கீழ்த்தளத்தில் உள்ள வினோபா ஜோதி அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அருகில் மகாத்மா காந்தி சேவாக்ராம் குடிசை மற்றும் காந்தி அஸ்தி பகுதிகளை பார்க்க ஏற்பாடு செய்துள்ளோம். புனரமைப்பு பணிகள் ஜூலைக்குள் முடிந்து விடும். அதன் பிறகு புதிய புகைப்படம் பொருத்தப்படும் என்றார்.