UPDATED : அக் 17, 2026 05:56 PM
ADDED : அக் 17, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஜவுளி பூங்காவில் கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ஜே.வி.எஸ்., நிறுவனம் சார்பில் காசநோய் தடுப்பு முகாம் நடந்தது.
மேலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலைய சிகிச்சை மேற்பார்வையாளர் கிரேஸ்கணேஷ், காசநோய் பார்வையாளர் விஸ்வநாதன் ஆகியோர் பணியாளர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும் காசநோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகளையும் விளக்கினர். மனிதவள மேலாளர் சீதா, அலுவலர் சிவானந்தம், தினேஷ், செவிலியர் கவுசல்யா ஏற்பாடுகளை செய்தனர்.
