ADDED : பிப் 06, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை; எழுமலை வட்டார சுகாதார நிலையம், கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது. திருவள்ளுவர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகி பெருமாள், லயன்ஸ் சங்க நிர்வாகி பொன்திருமலைராஜன் துவக்கி வைத்தனர். சுகாதார மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். முகாம் நோக்கம் பற்றி வட்டார மருத்துவ அலுவலர் விஸ்வநாத பிரபு, காசநோய் பிரிவு பணியாளர்கள் செல்ல பாண்டியன், பிரியா விளக்கமளித்தனர்.
சேடபட்டி வட்டாரத்தில் 12 முகாம்கள் மூலம் 7 ஆயிரம் பேருக்கு நடத்திய சோதனையில், 11 பேருக்கு காசநோய் பாதிப்பின் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.