/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டங்ஸ்டன் சுரங்கம்: விவசாயிகள் முடிவு
/
டங்ஸ்டன் சுரங்கம்: விவசாயிகள் முடிவு
ADDED : டிச 02, 2024 05:05 AM
மேலுார் : மேலுாரில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. நிர்வாகிகள் ரவி, குறிஞ்சி குமரன், ஜெயபால், ஸ்டாலின், அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலுார் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்கக் கூடாது என அரசு கொள்கை முடிவெடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு ஏல உரிமையை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
விவசாய சங்க நிர்வாகிகள் அருண், கிருஷ்ணன், செல்வராஜ், தும்பைபட்டி ஊராட்சி தலைவர் அயூப்கான், தினசரி காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் மணவாளன், வணிகர் முன்னேற்ற நலச்சங்க தலைவர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.