/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீரின்றி டி.வி.எஸ்., நகர் குடியிருப்போர் தவிப்பு
/
குடிநீரின்றி டி.வி.எஸ்., நகர் குடியிருப்போர் தவிப்பு
குடிநீரின்றி டி.வி.எஸ்., நகர் குடியிருப்போர் தவிப்பு
குடிநீரின்றி டி.வி.எஸ்., நகர் குடியிருப்போர் தவிப்பு
ADDED : ஜூலை 29, 2025 01:30 AM

மதுரை: மதுரை மாநகராட்சி 73வது வார்டு டி.வி.எஸ்., நகரில் ஒரு வாரத்திற்கும் மேல் குடிநீரின்றி மக்கள் தவிக்கின்றனர்.
இப்பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதை சரிபார்க்க புதிய குழாய்களில் தண்ணீர் விடப்பட்ட நிலையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு ரோடுகளில் வீணாக செல்கிறது.
அப்பகுதி ராஜகோபாலன், சித்ரா, ஸ்ரீனிவாசன் கூறியதாவது: முக்கிய ரோடுகள் தோண்டப்பட்டு பல மாதங்களாக பணிகள் நடந்தன. தற்போது இணைப்புகள் கொடுக்கப்பட்டு புதிய ரோடுகளும் அமைத்துவிட்டனர். இதையடுத்து ஏற்கனவே வழங்கி வந்த குழாயில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டு புதிய குழாய்கள் மூலம் விநியோகம் செய்தனர்.
தரமற்ற குழாய்கள் அழுத்தம் காரணமாக பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. புதிய ரோடுகள் மீண்டும் தோண்டப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சில இடங்களில் சரிவர இணைக்கப்படாமல் குழாய்களை புதைத்தது தெரிந்தது.ஒருவாரத்திற்கும் மேல் குடிநீர் கிடைக்கவில்லை. இவ்வாறு கூறினர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் முன் இதுபோன்ற பழுது ஏற்படுவது இயல்பு. ஒரு வாரத்தில் குடிநீர் திட்டப் பணிகள், ரோடு 'பேட்ச் ஒர்க்' பணிகள் முடிந்து தீர்வு காணப்படும்'' என்றார்.