/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாகனங்களை சேதப்படுத்திய இருவர் கைது
/
வாகனங்களை சேதப்படுத்திய இருவர் கைது
ADDED : மார் 20, 2025 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: அவனியாபுரம் வில்லாபுரம் பகுதியில் மார்ச் 16 இரவு நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ, டூவீலர்களை மர்ம நபர்கள் குடி போதையில் சேதப்படுத்தினர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தனர். அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
வாகனங்களை சேதப்படுத்தியது ஜெய்ஹிந்த்புரம் வீரபாண்டி 25, சூர்யா 22, என தெரிந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்ய முற்பட்ட போது போலீசாரிடமிருந்து தப்பிக்க பாழடைந்த சுவரில் ஏறி குதிக்க முயற்சித்த போது இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.