ADDED : மார் 10, 2026 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேடு எஸ்.ஐ., மலைச்சாமி மற்றும் போலீசார் மதுரை-- திண்டுக்கல் எல்லை பகுதி அரசம்பட்டி அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் சாக்கு மூடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா,
பான் மசாலா, கூல் லிப் பாக்கெட்கள் இருந்தன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டி தீபக் 28, வேம்பரளி அஜயை 24, கைது செய்த போலீசார் கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த 399 கிலோ குட்காவை காருடன் பறிமுதல் செய்தனர்.

