/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பங்குச்சந்தை வர்த்தகம் எனக்கூறி ரூ.1.22 கோடி பணம், நிலம் சுருட்டல் இருவர் கைது; முக்கிய குற்றவாளி துபாய் ஓட்டம்
/
பங்குச்சந்தை வர்த்தகம் எனக்கூறி ரூ.1.22 கோடி பணம், நிலம் சுருட்டல் இருவர் கைது; முக்கிய குற்றவாளி துபாய் ஓட்டம்
பங்குச்சந்தை வர்த்தகம் எனக்கூறி ரூ.1.22 கோடி பணம், நிலம் சுருட்டல் இருவர் கைது; முக்கிய குற்றவாளி துபாய் ஓட்டம்
பங்குச்சந்தை வர்த்தகம் எனக்கூறி ரூ.1.22 கோடி பணம், நிலம் சுருட்டல் இருவர் கைது; முக்கிய குற்றவாளி துபாய் ஓட்டம்
ADDED : அக் 19, 2024 10:02 PM

மதுரை:மதுரை, ஆண்டாள்புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 46; வணிக ஆலோசகராக உள்ளார். இவரது நண்பர் வாயிலாக, சுந்தராஜபுரம் பாலசுப்பிரமணியன், வில்லாபுரம் சரவணகுமார் அறிமுகமாகினர். இவர்கள் காண்டி டிரைனர்ஸ் பி.லிட்., என்ற பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தினர்.
இதில், முதலீடு செய்தால் மாதந்தோறும், 3 சதவீதம் வருவாய் கிடைக்கும் என கூறியதை நம்பி, சதீஷ்குமார், 22 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.
மூன்று மாதங்களுக்கு வருவாயாக தலா, 66,000 ரூபாய் கொடுத்தனர். பின், 'நாங்கள் தரும் செயலியில் பதிவு செய்து, நீங்களே வர்த்தகம் செய்யலாம்' என்று கூறி, சதீஷ்குமார் ஏற்கனவே முதலீடு செய்த, 22 லட்சத்தை இந்த செயலிக்கு மாற்றினர்.
சில வாரங்களுக்கு பின், 'உங்கள் வர்த்தக கணக்கில், பங்குச் சந்தை வீழ்ச்சியால், 40 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதை செலுத்த வேண்டும்' என, நெருக்கடி கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த சதீஷ்குமாருக்கு ஆறுதல் கூறுவது போல், 'உங்களிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் இருந்தால், எங்களுக்கு 'பவர்' எழுதிக் கொடுங்கள். அதை, 2 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்து, அதில், 1 கோடி ரூபாயை உங்களிடம் கொடுத்து விடுகிறோம்.
நாங்கள் ஒரு கோடியை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்கிறோம். அதில் வரும் லாபத்தை வைத்து, அடமான நிலத்தை மீட்பதோடு, ஏற்கனவே நஷ்டமான, 40 லட்சத்தையும் சரிகட்டி விடலாம்' என்றனர்.
இதை நம்பி, தேனி - உத்தமபாளையத்தில் உள்ள பூர்வீக நிலம், 73 சென்ட் இடத்தை, சரவணகுமாருக்கு, சதீஷ்குமார் 'பவர்' எழுதிக் கொடுத்தார். மறுநாளே, 73 சென்ட்டில், 20 சென்ட்டை மதுரை அவனியாபுரம் பிரேம்குமார் என்பவருக்கு சரவணகுமார், 'பவர்' எழுதிக் கொடுத்து, 1 கோடி ரூபாய்க்கு இடத்தை விற்றார்.
இதன் பிறகே, தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். மொத்தம், 1.22 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், பணத்தை மோசடி செய்தது உட்பட எட்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியம், பிரேம்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சரவணகுமார் துபாயில் தஞ்சம் அடைந்தார்.
சதீஷ்குமார் போன்று பலரிடம் மோசடி செய்த பணத்தை, துபாயில் சில தொழில்களில் முதலீடு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்யும் வகையில், விமான நிலையங்களில், 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.