நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் சீனிவாசாநகர் முதல் தெருவை சேர்ந்த சுதாமன் 55, சமையல் மாஸ்டர்.
நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் இவர் வீட்டில் திருட முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். வீட்டில் இருந்த அலைபேசியை எடுத்து மர்ம நபர்கள் தப்பினர்.
திருநகர் போலீசார் விசாரணையில், அலைபேசியை திருடியது திருநெல்வேலி வி.கே.புரம் மகேஷ் 47, மதுரை சின்ன அனுப்பானடி ராஜீவ்காந்திநகர் ஜெயமாரி 24 என தெரிந்தது.
அவர்களை போலீசார் கைது செய்தனர்.