/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்சாரம் பாய்ந்து இரு யானைகள் பலி
/
மின்சாரம் பாய்ந்து இரு யானைகள் பலி
ADDED : அக் 15, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட உமாண்டிமலை வனப்பகுதியில், பருத்தியூர் அருகே வேட்டைத்தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், மேட்டு பகுதியில் இருந்து, தாழ்வான நிலத்தடி பகுதிக்கு வரும் வழியில், இரு பெண் யானைகள், மின்சாரம் பாய்ந்து இறந்திருப்பதைக் கண்டறிந்தனர்.
விசாரணையில், விவசாய கிணற்றுக்குசெல்லக்கூடிய தாழ்வழுத்த மின்கம்பியில் உரசி, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து யானைகள் இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

