/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாகன தணிக்கையில் இருநுாறு கிராம் கஞ்சா
/
வாகன தணிக்கையில் இருநுாறு கிராம் கஞ்சா
ADDED : மார் 31, 2025 06:10 AM
மதுரை : மதுரையில் சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கையாக வாகன தணிக்கை நடந்தது.
முக்கிய ரோடுகள், குற்ற சம்பவம் அதிகம் நடக்கும் இடங்கள், வைகை கரையோர பகுதிகளில் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் 400க்கும் மேற்பட்ட நகர், போக்குவரத்து போலீசார்தணிக்கையில் ஈடுபட்டனர். சோதனைச் சாவடிகளில்சந்தேகப்படும் வாகனங்கள், ஆட்டோக்களை சோதனை செய்தனர். மோட்டார் வாகன சட்டங்களை மீறும் இளைஞர்களை கண்காணித்தனர்.
டூவீலர்கள், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் என மொத்தம் 2,633 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. குடிபோதையில் ஓட்டுதல்,தலைக்கவசம் அணியாமல், அதிவேகமாக ஓட்டுதல் என 116 வழக்குகள் பதியப்பட்டன. 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. ஆவணங்கள் இல்லாத 43 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.