ADDED : ஆக 11, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் அருகே செட்டியபட்டியைச் சேர்ந்தவர்கள் அஜித் 22, ராகுல் டிராவிட் 24. பட்டதாரிகள். இவர்கள் நேற்று டூ வீலரில் பேரையூருக்கு சென்று விட்டு திரும்பினர்.
இரவு 7:45 மணிக்கு பேரையூர்--உசிலம்பட்டி ரோட்டில் மங்கள்ரேவு அடுத்த பெட்ரோல் பங்க் எதிரே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதினர். இதில் இருவரும் இறந்தனர். திண்டுக்கல்லை சேர்ந்த லாரி டிரைவர் பிரவீனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.