/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய வழக்கில் அ.தி.மு.க., நிர்வாகி உட்பட 2 பேர் கைது

ADDED : டிச 02, 2024 05:30 AM

திருநெல்வேலி : திருநெல்வேலி திசையன்விளை அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய அ.தி.மு.க., நிர்வாகி சுப்பிரமணி 38, உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டைச் சேர்ந்தவர் சிபு ஆண்டனி 50. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் முடவன்குளம் அருகே கைலாசபேரியில் இவருக்கு சொந்தமாக 60 சென்ட் நிலம் உள்ளது.
திசையன்விளை ஆற்றங்கரை பள்ளிவாசலில் ஹாலோ பிளாக் கம்பெனி நடத்தி வரும் கூத்தங்குழியைச் சேர்ந்த டான் பாஸ்கோ 52, என்பவர் சிபு ஆண்டனியின் நிலத்தை விலைக்கு கேட்டார். அ.தி.மு.க., நிர்வாகி முடவன்குளம் சுப்பிரமணி 38, புரோக்கராக செயல்பட்டார்.
விலையை குறைத்து கேட்டதால் நிலத்தை விற்க சிபு ஆண்டனி சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமுற்ற டான்போஸ்கோ, சுப்பிரமணி, நண்பர் சரோ ஆகியோர் சிபு ஆண்டனியை டூவீலரில் கடத்தி சென்றனர். அவரை மிரட்டி 30 சென்ட் நிலத்தை எழுதி வாங்கினர். அதற்கு ரூ.1 லட்சம் பணத்தை மட்டும் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சிபு ஆண்டனி திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரித்து அ.தி.மு.க., நிர்வாகி சுப்பிரமணி, டான் போஸ்கோவை கைது செய்தனர். சரோவை போலீசார் தேடி வருகின்றனர்.