/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தல் தி.மு.க., நிர்வாகி மகன் உட்பட 2 பேர் கைது
/
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தல் தி.மு.க., நிர்வாகி மகன் உட்பட 2 பேர் கைது
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தல் தி.மு.க., நிர்வாகி மகன் உட்பட 2 பேர் கைது
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தல் தி.மு.க., நிர்வாகி மகன் உட்பட 2 பேர் கைது
ADDED : செப் 24, 2025 11:08 PM
மதுரை,:காதல் விவகாரத்தில் தீயணைப்பு வீரரின் மகனை காரில் கடத்தி தாக்கியதாக, தி.மு.க., நிர்வாகி மகன் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்தவர் சிந்துஜா, 19, கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் வாயிலாக, நாகர்கோவில் தீயணைப்பு வீரரின் மகன் கோகுல் என்பவர் இந்த பெண்ணுக்கு அறிமுகமானார்.
கோகுல் நட்பை, சிந்துஜா துண்டித்தார். ஆத்திரமடைந்த கோகுல், இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாக சிந்துஜாவை மிரட்டினார். பயந்துபோன மாணவி, கல்லுாரி சீனியர் மாணவரான புதுாரைச் சேர்ந்த மாதேஷ், 21, என்பவரிடம் தெரிவித்தார்.
இவரது தந்தை, தி.மு.க., வர்த்தக அணி நிர்வாகி. மாதேஷ் அறிவுரைப்படி, கோகுலை மதுரைக்கு வருமாறு சிந்துஜா நேற்று முன்தினம் அழைத்தார்.
காந்தி மியூசியம் அருகே கோகுல் வந்த போது, இரு கார்களில் காத்திருந்த மாதேஷ் உள்ளிட்டோர் கோகுலை கடத்தி, அவரது போனில் இருந்த சிந்துஜா தொடர்புடைய புகைப்படங்களை அழித்தனர்.
பின், கோகுலை கடுமையாக தாக்கி, செல்லுார் பகுதியில் இறக்கிவிட்டு தப்பினர்.
கோகுல் புகாரின்படி, தல்லாகுளம் போலீசார் விசாரித்தனர்.
கடத்தலுக்கு பயன் படுத்திய கார், டி.ஆர்.ஓ., காலனி கார்த்திக் என்பவருடையது என தெரிந்தது. அவரையும், மாதேஷையும் போலீசார் கைது செய்து, சிந்துஜா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்தனர்.