/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐ.டி.ஐ., மாணவர் கொலை இரு 'சீனியர்'கள் சரண்
/
ஐ.டி.ஐ., மாணவர் கொலை இரு 'சீனியர்'கள் சரண்
ADDED : ஜூலை 17, 2025 02:55 AM
மதுரை:மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுதந்திரா நகரை சேர்ந்தவர் பிரசன்னா. மதுரை புதுார் அரசு ஐ.டி.ஐ., மாணவர். ஜூலை 14 மாலை சிலைமான் அருகே இளமனுார் கண்மாய் கரையில் எரிந்த நிலையில் இவரது உடல் கிடந்தது.
இவ்வழக்கில் நேற்று மதுரை மகிழம்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ராமர், 18, மானகிரி அபினேஷ், 18, ஆகியோர் மதுரை ஜே.எம்., கோர்ட் 2ல் சரண் அடைந்தனர்.
மேலும், ஒத்தக்கடை தாமோதரன், 18, கருப்பாயூரணி அசோக்பாண்டி, 20, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ஐ.டி.ஐ.,யில் பிரசன்னாவுக்கு ராமர், அபினேஷ் உட்பட நான்கு பேரும் சீனியர்கள். சில நாட்களுக்கு முன் ராமரை சக மாணவர் ஒருவர் அடித்துள்ளார்.
இதற்கு பிரசன்னா தான் காரணம் என ராமர் சந்தேகப்பட்டு, ஜூலை 14ம் தேதி ஐ.டி.ஐ .,யில் இருந்து இளமனுாருக்கு பிரசன்னாவை அழைத்து வந்துள்ளார். உடன் நண்பர்களும் வந்துள்ளனர்.
'நான் தாக்கப்பட்டதற்கு நீ தான் காரணம்' எனக்கூறி தாக்கியதில் மயங்கி விழுந்தார். பின், அருகில் கிடந்த பனை ஓலைகளை சேகரித்து அரைகுறையாக அவரை எரித்து தப்பினர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.