/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நான்கு வழிச்சாலையில் மீடியனை கடக்கும் டூவீலர்கள்
/
நான்கு வழிச்சாலையில் மீடியனை கடக்கும் டூவீலர்கள்
ADDED : அக் 28, 2024 04:36 AM
வாடிப்பட்டி : மதுரை -- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மீடியன்களை கடக்கும் டூவீலர்களால் விபத்துகள் தொடர்கிறது.
வாடிப்பட்டி -- சமயநல்லுார் இடையே தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லுார், கட்டப்புலி நகர் பகுதிகளில் டூவீலரில் செல்வோர் மீடியன்கள் மழைநீர் செல்லும் இடைவெளி வழியாக டூவீலரில் சாலையை கடக்கின்றனர். நகரி- திருவாலவாயநல்லுார் இடையே சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தால் வாகனங்கள் திரும்புவதற்கான 'யூ டர்ன்' பகுதியில் போலீசார் 'பேரி கார்டு' மூலம் தடுப்பு ஏற்படுத்தினர்.
இதனால் நகரி வந்து சோழவந்தான் செல்வோர் சென்டர் மீடியனை குறுக்காக கடக்கின்றனர். இப்பகுதி விபத்து வளைவாக உள்ளது. அரளிச் செடிகள் இடையே டூவீலரில் சென்டர் மீடியனில் காத்திருப்பவர்களுக்கு எதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் நகரியில் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் கூலித் தொழிலாளர்கள் டூவீலர்கள் செல்கின்றனர். சென்டர் மீடியனில் பள்ளங்கள் வெட்டி தடுத்தாலும், விதிமீறும் வாகனங்களின் எண்ணிக்கை குறையவில்லை. போக்குவரத்து போலீசார் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

