/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவியர் விடுதியில் தட்டச்சு பயிற்சி
/
மாணவியர் விடுதியில் தட்டச்சு பயிற்சி
ADDED : ஆக 02, 2025 01:39 AM
மதுரை: மேலுாரில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் கல்லுாரி மாணவியர் விடுதி உள்ளது. இங்கு 65 பேர் தங்கியுள்ளனர். கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு நடத்தினார். அவருடன் துறை அலுவலர் ராமகிருஷ்ணன், தாசில்தார் செந்தாமரை இருந்தனர். மாணவியருடன் கலெக்டர் கலந்துரையாடினார். தட்டச்சு பயிற்சிக்காக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது என்றனர். இதையடுத்து திறன்மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்தை ஏற்பாடு செய்து இலவச பயிற்சிக்கு வழிசெய்தார். விடுதியின் சுற்றுச் சூழலை மேம்படுத்த வராண்டா, வளாகத்தில் பூந்தொட்டிகளை வைக்க உத்தரவிட்டார்.
மேலும் தனியார் நிறுவனங்களின் 'சி.எஸ்.ஆர்.,' நிதியுதவியுடன் உள்விளையாட்டு அரங்கு அமைக்கவும் உத்தரவிட்டார். உணவுக் கூடத்தை ஆய்வு செய்த கலெக்டர், மதிய உணவை ருசித்தார். கழிப்பறை வசதிகளை மேம்படுத்தவும் ஆலோசனை வழங்கியவர், மாணவியருக்கு சுகாதார திட்டத்தின் கீழ் இலவச 'நாப்கின்'களுக்கும் ஏற்பாடு செய்தார்.