/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம் அரசின் முடிவால் அதிகாரிகள் பலிகடா' உதயகுமார் குற்றச்சாட்டு
/
'திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம் அரசின் முடிவால் அதிகாரிகள் பலிகடா' உதயகுமார் குற்றச்சாட்டு
'திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம் அரசின் முடிவால் அதிகாரிகள் பலிகடா' உதயகுமார் குற்றச்சாட்டு
'திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம் அரசின் முடிவால் அதிகாரிகள் பலிகடா' உதயகுமார் குற்றச்சாட்டு
ADDED : டிச 23, 2025 07:05 AM
மதுரை: ''மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதித்து இருந்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதட்டங்களுக்கு வேலையில்லாமல் இருந்திருக்கும். அரசின் முடிவால் அதிகாரிகள் பலிகடாவாகி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்,'' என, அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு மாதமாக பதட்டமான சூழ்நிலை இருப்பது என்பது திக்கு தெரியா காட்டில் அலைவது போல தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் நிர்வாகம் தடுமாறி கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதிபதி அனுமதி அளித்தும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல தி.மு.க., அரசு அடம்பிடிக்கிறது.
கார்த்திகை தீபநாளில் முருக பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதி அளித்திருந்தால் தற்போது ஒரு மாதமாக தொடரும் களேபரங்கள், பதட்டங்களுக்கு வேலை இல்லாமல் போய் இருக்கும் என்று முஸ்லிம்களும், ஹிந்துக்களும் ஒத்த கருத்துடன் தெரிவித்துள்ளார்கள். தொடர்ந்து ஒரு மாதமாக பல்வேறு அதிர்வுகளை சந்தித்த ஸ்டாலின் அரசு ஒரு உயிரை பறிகொடுத்தும் இன்னமும் உணரவில்லை. இன்றைக்கு ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட ஸ்டாலின் அரசால் முடக்கப்படும் நிலை என்றால், அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மூலம் தலைமை செயலர், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளில் கவனத்தை செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். நீதிமன்ற கண்டனத்திற்கு அதிகாரிகள் பலிகடா ஆகவேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது யார்.
இதனால் இன்றைக்கு அரசின் நிர்வாகம் முடங்கிப் போய் உள்ளது. வீண்வம்பு, பிடிவாதம், நீதிமன்றம் அச்சுறுத்தல் நாட்டு மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் தி.மு.க., அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்து விட்டது. மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்தால், முருகனால் கூட நம்மை காப்பாற்ற முடியாது. இவ்வாறு கூறினார்.

