/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாக்குதலால் பயமில்லை உதயகுமார் உறுதி
/
தாக்குதலால் பயமில்லை உதயகுமார் உறுதி
ADDED : நவ 11, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே மங்கல்ரேவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு, கட்சியினருடன் உதயகுமார் வந்த போது அ.ம.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர். இதில் மூவர் காயமுற்றனர்.
மதுரை எஸ்.பி., அரவிந்த்திடம், உதயகுமார் நேற்று புகார் மனு அளித்தார்.
பின் அவர் கூறுகையில், ''அ.ம.மு.க., -- ஓ.பி.எஸ்., தரப்பில் இருந்து தொடர் மிரட்டல் வருகிறது. அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை,'' என்றார்.
இதற்கிடையே, தாக்குதல் நடத்தியதாக சேடப்பட்டி தெற்கு ஒன்றிய அ.ம.மு.க., செயலர் பழனிசாமி கைது செய்யப்பட்டார்.

