/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிரந்தர அலுவலர் தேவை உதயகுமார் வலியுறுத்தல்
/
நிரந்தர அலுவலர் தேவை உதயகுமார் வலியுறுத்தல்
ADDED : நவ 04, 2024 05:14 AM
பேரையூர் : டி. கல்லுப்பட்டி பேரூராட்சியில் ஓராண்டாக செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நவ. 1 ல் தினமலர் இதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலெக்டர் சங்கீதாவுக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:
டி. கல்லுப்பட்டியில் குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள், புதிய கட்டட அனுமதி உள்ளிட்ட அனைத்து பணிகளும் பேரூராட்சி அலுவலகம் மூலம் தான் செய்து தர வேண்டும். இந்த அலுவலகத்தில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் மேற்கண்ட பணிகள் பாதித்து, அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் தமிழ்நாட்டில் சிறந்த பேரூராட்சி விருது பெற்ற இப்பேரூராட்சி, தற்போது செயல் அலுவலர் இல்லாமல் உள்ளது. பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.
தற்போது மழைக்காலம் என்பதால் பணிகளை நிறைவேற்றுவது சவாலாக சிரமமாக உள்ளது.
அடிப்படைப் பணிகள் விரைந்து நடக்க நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறியுள்ளார்.