/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் எந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்: உதயகுமார்
/
முதல்வர் எந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்: உதயகுமார்
முதல்வர் எந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்: உதயகுமார்
முதல்வர் எந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்: உதயகுமார்
ADDED : பிப் 21, 2025 05:48 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பன்னியான், முதலைக்குளம், கொடிக்குளம், கோவிலாங்குளம் பகுதியில் அதி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது. செல்லம்பட்டி, உசிலம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிருபர்களிடம் உதயகுமார் கூறியதாவது: பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து தொடர்கிறது. உயிரிழப்பு இல்லாமல் பட்டாசு தயாரிக்கும் காலம் கனிய வேண்டும். அரசு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் விருதுநகருக்கு வந்த போது பட்டாசு ஆலையை பார்த்தது ஒரு போட்டோ ஷூட்.
விளம்பரத்தில் தான் கவனம் செலுத்துகின்றனர். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பே போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் மூன்று முறை உயர்த்தி உள்ளனர். 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என முதல்வர் சொல்கிறார். எதை நிறைவேற்றினார் என்றார்.

