/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏட்டு குடும்பத்திற்கு அரசு வேலை உதயகுமார் வலியுறுத்தல்
/
ஏட்டு குடும்பத்திற்கு அரசு வேலை உதயகுமார் வலியுறுத்தல்
ஏட்டு குடும்பத்திற்கு அரசு வேலை உதயகுமார் வலியுறுத்தல்
ஏட்டு குடும்பத்திற்கு அரசு வேலை உதயகுமார் வலியுறுத்தல்
ADDED : மார் 30, 2025 03:23 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் போலீஸ் ஏட்டு முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது தாயார் பூங்கொடி, மனைவி சுவேதா, மூன்று குழந்தைகளுக்கு சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டதற்கு நியாயம் கேட்க போலீஸ்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரிடம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கவனத்திற்கு கொண்டு வருகிறார். பதில் இருக்கிறது என்று சொன்னால் சட்டசபையில் சொல்லி இருக்க வேண்டியது தானே. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அ.தி.மு.க.,வின் அனைத்து உறுப்பினர்கள் மீதும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்து ஜனநாயக படுகொலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
முத்துக்குமார் குடும்பத்தாரின் சூழ்நிலையை கருதி ரூ. ஒரு கோடி அரசு நிவாரண உதவியை வழங்க வேண்டும். இதுபோன்று பழனிசாமி முதல்வராக இருந்தபோது வழங்கியுள்ளார். மேலும் அவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். இங்குள்ள டாஸ்மாக் கடை அருகில் இதுவரை மூன்று கொலைகள் நடந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அதனை அகற்ற வேண்டும் என்றார்.