/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா உதயகுமார் கேள்வி
/
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா உதயகுமார் கேள்வி
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா உதயகுமார் கேள்வி
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா உதயகுமார் கேள்வி
ADDED : ஜூலை 04, 2025 03:19 AM
எழுமலை: மதுரை மாவட்டம் எழுமலை அருகே மேலத்திருமாணிக்கத்தில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, கோயிலில் வழிபாடு, அன்னதானம், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
உதயகுமார் கூறியதாவது:
மடப்புரம் அஜித்குமாரை திருட்டு புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.
ஆனால் அவரை விசாரித்தது தனிப்படை, சிறப்பு படையினர். இதே போன்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் எல்லாம் இதுபோன்று தனிப்படை அமைத்துதான் விசாரிக்கிறீர்களா.
முதல்வரோ, சாரி என்கிறார். சாரி, சொன்னால் போன உயிர் திரும்பி விடுமா.
இதுவே முதல்வர் வீட்டில் நடந்திருந்தால் பொறுத்திருப்பீர்களா. தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, கொலைகார ஆட்சி நடக்கிறதா. காவல் நிலையமா, கொலைகார நிலையமா. விசாரணைக்கு போக வேண்டுமென்றால் அஞ்ச வேண்டியுள்ளது.
நீதி கிடைக்கும் வரை அ.தி.மு.க., அஜித்குமார் குடும்பத்திற்கு உறுதுணையாக நிற்கும் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மனித உரிமையை மீறி பகலில் அடித்துள்ளனர். விசாரணை செய்யுங்கள். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துங்கள்.
இன்றைய ஆட்சியின் கொடுமை நன்கு தெரியும், தெரிந்தும் மன்னித்து விடாதீர்கள்.
முதல்வர் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, 'உங்களுக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை, உயிர் பலியை தடுக்க முடியவில்லை,
பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியவில்லை, சட்ட ஒழுங்கு சீர்கேடை தடுக்க முடியவில்லை. பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வந்து இதற்கு தீர்வு காண்பார்' என்றார்.