/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழனிசாமியை கோட்டைக்கு அனுப்பும் எழுச்சிப்பயணம்: உதயகுமாருக்கு ஆசை எதிர்க்கட்சி துணைத்தலைவர்

ADDED : ஆக 18, 2025 03:05 AM
பேரையூர் : 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சிப் பயணம் பழனிசாமியை கோட்டைக்கு அனுப்பும்' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பழனிசாமி 4 வது கட்ட எழுச்சி பயணத்தின் போது மதுரை வருகிறார். இவருக்கு வரவேற்பு அளிக்க, முன்னாள் அமைச்சர் உதயகுமார், மதுரை பகுதியில் வீடுவீடாக சென்று அழைப்பு கடிதம், பிளாஸ்டிக் வாளிகளை வழங்கினார்
அவர் கூறியதாவது: 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பழனிசாமியின் எழுச்சிப் பயணம் இந்திய அளவில் மாபெரும் விவாதமாக பேசப்படுகிறது. அவர் செல்லும் இடம் எல்லாம் ஆதரவு பெருகி வருகிறது. திரளும் மக்கள் கூட்டத்தைக் கண்டு ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.
இந்த எழுச்சி பயணம் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பு பயணம். பழனிசாமியை மீண்டும் கோட்டைக்கு அனுப்பும் பயணம். பழனிசாமி 4ம் கட்ட பயணத்தின்போது மதுரைக்கு வருகிறார். இதற்காக பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று நேரில் அழைப்பு கொடுக்கிறோம். கடிதம் மூலம் முதற் கட்டமாக 25 ஆயிரம் பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை என்றாலே அரசியல் திருப்புமுனை உள்ள பகுதி. நிச்சயம் பழனிசாமியின் மதுரை எழுச்சி பயணம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றார்.