/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகாலில் முன்னறிவிப்பின்றி ஒலி ஒளி காட்சி நிறுத்தம்
/
மகாலில் முன்னறிவிப்பின்றி ஒலி ஒளி காட்சி நிறுத்தம்
மகாலில் முன்னறிவிப்பின்றி ஒலி ஒளி காட்சி நிறுத்தம்
மகாலில் முன்னறிவிப்பின்றி ஒலி ஒளி காட்சி நிறுத்தம்
ADDED : பிப் 18, 2024 01:07 AM
மதுரை: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் மகாலில் நடத்தப்பட்டு வந்த ஒலி ஒளி கண்காட்சி முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 30 ஆண்டுகளுக்கு முன் மகாலின் முன்புறத்தில் உள்ள திறந்தவெளி விதானத்தில் ஒலியும் ஒளியும் காட்சி துவங்கப்பட்டது.
விடுமுறை இன்றி தினமும் மாலை 6:45 மணிக்கு ஆங்கிலத்திலும், இரவு 8:00 மணிக்கு தமிழிலும் திருமலை நாயக்க மன்னரின் வரலாறு, பெருமைகள் குறித்து ஒலி ஒளி காட்சி நடத்தப்பட்டது.
மழை பெய்யும் நாட்களில் மட்டும் காட்சி தற்காலிகமாக நிறுத்தப்படும். தற்போது மகாலில் ரூ. 6 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் நாடக சாலை மண்டபம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. ஆங்காங்கே தரைத்தளம் அமைக்கும் இடத்தை தவிர மற்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் முன்னறிவிப்பு இன்றி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒலி ஒளி காட்சி 15 நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்படாததால் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
நிறுத்தப்பட்டதற்கான காரணத்தையும் மீண்டும் எப்போது துவங்கும் என்பதையும் அறிவிப்பு பலகையில் நிரந்தரமாக வைக்க சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.