/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்டாத கழிவுநீர் வடிகால் அச்சம்பட்டியில் முறைகேடு
/
கட்டாத கழிவுநீர் வடிகால் அச்சம்பட்டியில் முறைகேடு
கட்டாத கழிவுநீர் வடிகால் அச்சம்பட்டியில் முறைகேடு
கட்டாத கழிவுநீர் வடிகால் அச்சம்பட்டியில் முறைகேடு
ADDED : டிச 21, 2025 05:35 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் அச்சம்பட்டி கிழக்கு தெருவில் கட்டாத கழிவுநீர் வடிகாலுக்கு அரசு பணம் செலவழித்ததாக கணக்கு காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதி கோபிநாத்: எங்கள் தெருவில் கடந்தாண்டு 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.1.45 லட்சத்தில் கழிவுநீர் வடிகால் கட்டியதாக அரசு வலைதள பக்கத்தில் தகவல் வெளியானது. ஆனால் வடிகால் கட்டவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல் படி ஒன்றிய அதிகாரியிடம் கேட்டபோது 'தகவல் தெரியவில்லை. மாற்று வேலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்' என்றனர். 'வடிகால் கட்டி தருகிறோம். பிரச்னை செய்யக்கூடாது' என தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் போலீசார் மூலம் என்னிடம் எழுதி வாங்கினர்.
நடக்காத பணிக்கான தொகை 2024 அக்.,8ல் ஒப்பந்ததாரர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த பின் 2024 செப்.,27ல் பணி துவங்கி கிடப்பில் போட்டனர். மெயின் வீதியில் கழிவுநீர் வெளியேற வழியின்றி வடிகால் கட்டினர். இதனால் வடிகால் நிரம்பி தாழ்வாக உள்ள கிழக்கு தெருவில் கழிவுநீர் செல்வதால் சுகாதாரம் பாதிக்கிறது. வெங்கடேசன் எம்.எல்.ஏ.,விடம் முறையிட்ட பின் அதிகாரிகள் வடிகால் கட்ட மதிப்பீடு தயாரித்து வருகின்றனர். முறைகேடு குறித்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றார்.

