ADDED : ஆக 07, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர், : பேரையூர் அருகே பாப்புரெட்டிப்பட்டி காலனியில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராததால் அப்பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் டி. கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.
இப்பகுதியில் வைகை கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி நடப்பதால் பல பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.