/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'யூனியன் கோட்டா': வளம் கொழிக்கும் பஸ் 'ரூட்'களுக்கு கிராக்கி : முன்னணி போக்குவரத்து சங்கங்கள் கபளீகரம்
/
'யூனியன் கோட்டா': வளம் கொழிக்கும் பஸ் 'ரூட்'களுக்கு கிராக்கி : முன்னணி போக்குவரத்து சங்கங்கள் கபளீகரம்
'யூனியன் கோட்டா': வளம் கொழிக்கும் பஸ் 'ரூட்'களுக்கு கிராக்கி : முன்னணி போக்குவரத்து சங்கங்கள் கபளீகரம்
'யூனியன் கோட்டா': வளம் கொழிக்கும் பஸ் 'ரூட்'களுக்கு கிராக்கி : முன்னணி போக்குவரத்து சங்கங்கள் கபளீகரம்
ADDED : டிச 23, 2024 05:13 AM

மதுரை: மதுரை மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் வசூல் அதிகம் உள்ள வழித்தடங்களில் முற்றிலும் 'யூனியன் கோட்டா' முறையில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதாக சர்ச்சை வெடித்துள்ளது.
மதுரையில் 16 போக்குவரத்து டிப்போக்கள் உள்ளன. இதில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் (சுழல்முறை சீனியாரிட்டி பேட்ச் லிஸ்ட்) பஸ் வழித்தடங்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு டிப்போவிலும் 15க்கும் மேற்பட்ட வசூல் அதிகமுள்ள ரூட்டுகள் உள்ளன.
குறிப்பாக தொலைதுாரம் செல்லும் புறநகர் பஸ் வழித்தடங்களான மதுரை - கொடைக்கானல், மதுரை - கோவை, மதுரை - திருப்பூர், மதுரை -நாகர்கோவில், மதுரை - ராமேஸ்வரம், மதுரை- ஓசூர் உட்பட ஒவ்வொரு டிப்போவிலும் 20க்கும் மேற்பட்ட வழித்தடங்களுக்கு பணி ஒதுக்கீட்டில் போட்டி ஏற்படும்.
இதனால் இவ்வழித்தடங்களுக்கு 'யூனியன் கோட்டா' என்ற அடிப்படையில் ஆளும் கட்சி, அ.தி.மு.க., சி.ஐ.டி.யு., அலுவலக பணியாளர்கள் என முக்கிய சங்கங்களில் உள்ள ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படுகின்றன. மொத்தம் 85 சங்கங்கள் இருந்தும், இதுபோன்ற அரசியல் பின்புலம், பெரிய சங்கங்களுக்குத்தான் அதிக வாய்ப்பு கிடைக்கும். சிறிய சங்கங்கள், நடுநிலை நடத்துநர், ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆளும்கட்சி சங்கத்திற்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவது வழக்கமாக உள்ளது. இதனால் நடுநிலை, சிறிய சங்கங்களின் ஓட்டுநர், நடத்துநர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.என்.டி.யு.சி., பொதுச் செயலாளர் ஜீவன்மூர்த்தி கூறியதாவது:
நகர் கிளைகளில் 6 மாதங்கள், புறநகர் கிளைகளில் ஓராண்டு வீதம் சுழல்முறை சீனியாரிட்டி பேட்ச் லிஸ்ட் வெளியிட வேண்டும். இதில் அனைத்து சங்கங்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் ஆளும்கட்சி 50 சதவீதம் இடங்களை கபளீகரம் செய்துவிடுகிறது. எதிர்க்கட்சி சங்கம் உட்பட முக்கிய சங்கங்கள் அந்த வாய்ப்பை பிரித்துக் கொள்கின்றன. சில டிப்போக்களில் வசூல் ரூட்டுகளை பெற ரூ.பல லட்சம் பேரமும் நடக்கிறது. குறிப்பாக மதுரை வடக்கு, உசிலம்பட்டி கிளைகளில் இப்பிரச்னை அதிகம். இம்முறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 'யூனியன் கோட்டா' முறையை பின்பற்றக்கூடாது என உத்தரவிட்டது. ஆனாலும் சங்கங்களுக்கு அதிகாரிகள் துணை போகின்றனர். இம்முறையை வெளிப்படையாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.