ADDED : அக் 17, 2025 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: மதுரை காமராஜ் பல்கலை 'பி' மண்டல கல்லுாரிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டியில் சவுராஷ்டிரா கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
திருநகரில் 'நாக் அவுட்' முறையில் நடந்த இப்போட்டிகளின் இறுதிப் போட்டியில் இக்கல்லுாரி அணியினர் 3 --- 0 என்ற கோல் வித்தியாசத்தில் சரஸ்வதி நாராயணன் கல்லுாரி அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். 23வது ஆண்டாக சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களை கல்லுாரி செயலாளர் குமரேஷ், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன், முன்னாள் முதல்வர் ரவீந்திரன், விளையாட்டு குழு உறுப்பினர்கள் கணேசன், ஜெயந்தி, ஜீவப்பிரியா, விஷ்ணு பிரியா, பாலாஜி, செந்தில்குமார் பாராட்டினர்.