
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான ஆண்கள் பிரிவு செஸ் போட்டி அமெரிக்கன் கல்லுாரியில் நடந்தது.
பல்கலைக்குட்பட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 65 மாணவர்கள் கலந்து கொண்டனர். 'ரவுண்ட் ராபின்' முறைப்படி பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் அமெரிக்கன் கல்லுாரியின் பி.காம் மாணவர் தனுஷ் ராகவ் சாம்பியன் பட்டம் பெற்றார். முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணைமுதல்வர் மார்டின் டேவிட், உடற்கல்வி துறைத்தலைவர் பாலகிருஷ்ணன், நிதிக்காப்பாளர் பியூலா ரூபிகமலம், இயக்குநர் நிர்மல் சிங், பல்கலை உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் பாராட்டினர்.
திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி மாணவர் தீனதயாளன், சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லுாரி மாணவர் ஆப்ரஹாம் ஜஸ்டின், அமெரிக்கன் கல்லுாரி மாணவர்கள் தனுஷ் ராகவ், குறளரசன், குமரேஷ், ஜோஸ்வா சுதன் ஆகியோர் முதல் ஆறு இடங்களைப் பெற்றனர். இவர்கள் அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் மதுரை காமராஜ் பல்கலை அணி சார்பில் விளையாட தேர்வாகினர்.