தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பல்கலைக்கழக கல்வி கண்காட்சி

பல்கலைக்கழக கல்வி கண்காட்சி

பல்கலைக்கழக கல்வி கண்காட்சி


ADDED : செப் 25, 2026 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 11:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, செப். 26 –

மதுரை அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளியில் பல்கலைக்கழக கல்வி கண்காட்சி நடந்தது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட முன்னணி பல்கலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. பொறியியல், மருத்துவம், கலை மற்றும் வடிவமைப்பு, வணிக மேலாண்மை, கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, விருந்தோம்பல், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் குறித்து பிரதிநிதிகள் மாணவர்களுக்கு விளக்கினர்.

மதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 பள்ளிகளில் இருந்து பங்கேற்ற பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அறிந்து கொண்டனர். சேர்க்கை நடைமுறை, கல்வித் தகுதி, உதவித் தொகை, கட்டண விவரங்கள், எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து ஒரே இடத்தில் அறிந்து கொள்ள முடிந்ததை பெற்றோர்கள் வரவேற்றனர். பள்ளி இயக்குநர் அபிலாஷ் வழிகாட்டுதலில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us