ADDED : டிச 11, 2025 05:15 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி வேலம்மாள் சர்வதேச மைதானத்தில் நடந்தது. பத்து கல்லுாரிகளின் அணிகள் பங்கேற்றன. நாக்அவுட் முறையில் நடந்த போட்டிகளின் முடிவுகள்:
முதல் போட்டியில் எம்.ஆர். கல்லுாரி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 62 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய எஸ்.எப்.ஆர். கல்லுாரி 4.5 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2வது போட்டியில் டி.ஏ.சி., அணி 3 விக்கெட் இழப்பிற்கு 11 ரன் எடுத்தது. மதுரை மீனாட்சி கல்லுாரி முதல் ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 3வது போட்டியில் ஜி.டி.என். கல்லுாரி 102 ரன் வித்தியாசத்தில் வி.எச்.என். கல்லுாரியை வீழ்த்தியது. 4வது போட்டியில் லேடிடோக் கல்லுாரி 47 ரன் வித்தியாசத்தில் எஸ்.எப்.ஆர்., கல்லுாரியை வீழ்த்தியது.
5வது போட்டியில் மேலுார் அரசு கல்லுாரி 28 ரன் வித்தியாசத்தில் ராமசாமி நாயுடு கல்லுாரியை வீழ்த்தியது.
6வது போட்டியில் மீனாட்சி அரசு கல்லுாரி 10 விக்கெட் வித்தியாசத்தில் லேடிடோக் கல்லுாரியை வீழ்த்தியது. 7 வது போட்டியில் ஜி.டி.என். கல்லுாரி 10 விக்கெட் வித்தியாசத்தில் யாதவர் கல்லுாரியை வீழ்த்தியது.
8வது போட்டியில் யாதவர் கல்லுாரி 48 ரன் வித்தியாசத்தில் மேலுார் அரசு கல்லுாரியை வீழ்த்தியது.
9 வது போட்டியில் யாதவர் கல்லுாரி 18 ரன் வித்தியாசத்தில் லேடிடோக் கல்லுாரியை வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில் மீனாட்சி அரசு கல்லுாரி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜி.டி.என். கல்லுாரியை வீழ்த்தியது. யாதவர் கல்லுாரி மூன்றாமிடம், லேடிடோக் கல்லுாரி 4ம் இடம் பெற்றன.
முதல்வர் வானதி, பயிற்சியாளர்கள் கணேசன், செல்வபாண்டி பாராட்டினர்.

