sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : டிச 11, 2025 05:15 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

பக்தி சொற்பொழிவு

துாய அன்னை சாரதா தேவியார் ஜெயந்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 11:15 மணி.

45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: வைஷ்ணவி, முன்னிலை: ஆனந்தன், விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி, சொற்பொழிவு, மதியம் 1:00 மணி.

தியானமும் யோகமும்: நிகழ்த்துபவர் - பிரஜாபிதா பிரம்மா குமாரி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

ஆய்வுத் தளங்களும், ஆய்வு நெறிமுறைகளும் - கருத்தரங்கம் நிறைவு விழா: மதுரை காமராஜர் பல்கலை, தலைமை: தமிழியற்புல தலைவர் பேராசிரியர் ராமராஜபாண்டியன், சிறப்புரை: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி ராஜா, ஏற்பாடு: நாகமலைப் புதுக்கோட்டை ஞாலத்தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதியம் 3:30 மணி.

பாரதி பிறந்தநாள் விழா: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் கார்த்திகேயன், சிறப்புரை: இளமனுார் அரசுப் பள்ளி தமிழாசிரியர் மகேந்திரபாபு, ஏற்பாடு: பாரதி சிந்தனை அரங்கம், தமிழ்த்துறை, காலை 10:45 மணி

விழிப்புணர்வு பயிலரங்கம், வேலை வாய்ப்பிற்காக புதுமை தொழில்முனைவு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கள்ளிக்குடி தமிழ் புட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, காலை 11:30 மணி.

பாரதியார் பிறந்தநாள் விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராம சுப்பையா, சிறப்பு விருந்தினர்: செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், லட்சுமணி நாயுடு - ஞானம்மாள் அறக்கட்டளை, காலை 9:45 மணி.

பொது

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மேலுார், பங்கேற்பு: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

பாரதியார் பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்தல், சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, காலை 9:00மணி, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம்.

ஆண்டுவிழா, பாரதியார் பிறந்தநாள் விழா: தானம் மக்கள் கல்வி நிலையம், புல்லுாத்து, மதுரை, 'சமூக மேம்பாட்டுப்பணி பார்வையில் பாரதியின் ஆத்திச்சூடி' புத்தகம் வெளியிடுபவர்: நிர்வாக இயக்குநர் வாசிமலை, சிறப்பு விருந்தினர்கள்: வனத்துறை திட்ட இயக்குநர் பிரஷாந்த், மாவட்ட வன அலுவலர் ரேவ்டி ராமன், காலை 10:00 மணி.

தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, 'பாரதி என்றொரு மானிடன்' சிறப்புரை: சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, ஏற்பாடு: மதுரை அம்பிகா மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, திருமங்கலம் அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரி, காலை 10:30 மணி.

ஓய்வூதியர்களை கவுரவிக்கும் விழா: வாசன் கண் மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, தலைமை: மாநில துணைப் பொதுச்செயலாளர் பிச்சைராஜன், இலவச கண் சிகிச்சை முகாம், ஏற்பாடு: மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

மருத்துவம்

இலவச காது பரிசோதனை, காது கேட்கும் கருவி பயிற்சி: குளோபல் ஹியரிங் எய்டு சென்டர், 7, டாக்டர் சத்தார் ரோடு, அண்ணாநகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us