
பெருங்குடி: மதுரை காமராஜ் பல்கலை மண்டல சாம்பியன் கல்லுாரிகளுக்கிடையே நடந்த கால்பந்து போட்டிகளில் சரஸ்வதி நாராயணன் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது.
முதல் போட்டியில் சரஸ்வதி நாராயணன் கல்லுாரி அணி 3-:2 என்ற கோல் வித்தியாசத்தில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி அணியையும், 2வது போட்டியில் யாதவர் கல்லுாரி அணியை 6-:0 என்ற கோல் வித்தியாசத்திலும், 3வது போட்டியில் காளீஸ்வரி கல்லூரி அணியை 3-1 என்ற கோல் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று மொத்தம் 9 புள்ளிகள் பெற்று மதுரை காமராஜ் பல்கலை சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. சரஸ்வதி நாராயணன் கல்லுாரி 2017, 2019, 2025 சாம்பியன் கோப்பைகளை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களை முதல்வர் சந்திரன், துணை முதல்வர் கணேசன், உடற்கல்வி இயக்குனர் யுவராஜ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

