/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடியுரிமை கேட்டு பிரதமருக்கு கடிதம்
/
குடியுரிமை கேட்டு பிரதமருக்கு கடிதம்
ADDED : டிச 11, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அருகே உச்சபட்டி, மேலுார் அருகே திருவாதவூர், மதுரை ஆனையூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்கள் உள்ளன.
1990 முதல் உச்சபட்டி முகாம் இயங்கி வருகிறது. இங்கு 965 ஆண்கள், 1135 பெண்கள் என மொத்தம் 2100 பேர் உள்ளனர். சமீபத்தில் மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.
இதை செயல்படுத்த கோரி நேற்று இலங்கை தமிழர்கள் பிரதமர் அலுவலகத்திற்கு மனு அனுப்பினர். முதல் கட்டமாக 18 வயது நிரம்பிய ஆயிரம் பேர் இந்த மனுவை திருமங்கலம் தபால் நிலையத்தில் இருந்து அனுப்பினர்.

