ADDED : நவ 18, 2024 05:22 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான ஜூடோ போட்டிகள் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் நடந்தது.
48 கிலோ பிரிவில் மீனாட்சி கல்லுாரி ஹர்ஷினி முதலிடம், பாத்திமா கல்லுாரி ஞான ஜாக்குலின் இரண்டாமிடம், மதுரை காந்தி என்.எம்.ஆர். கல்லுாரி திவ்யஸ்ரீ, பழநி ஏ.பி.ஏ. கல்லுாரி மூன்றாமிடம் பெற்றனர். 52 கிலோ பிரிவில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி பவித்ரா முதலிடம், பாத்திமா கல்லுாரி அர்கேஸ்வரி இரண்டாமிடம், மீனாட்சி கல்லுாரி ஷர்மிளா மூன்றாமிடம் பெற்றனர்.
57 கிலோ பிரிவில் லேடிடோக் கல்லுாரி ஸ்ருதிகா லட்சுமி முதலிடம், அமெரிக்கன் கல்லுாரி செல்லமணி இரண்டாமிடம், சாத்துார் கிருஷ்ணசாமி கல்லுாரி அன்னலட்சுமி மூன்றாமிடம் பெற்றனர்.
63 கிலோ பிரிவில் லேடிடோக் கல்லுாரி குணா முதலிடம், அமெரிக்கன் கல்லுாரி சண்முகப்ரியா இரண்டாமிடம், கிருஷ்ணசாமி கல்லுாரி அருள்ஜோதி, பாத்திமா கல்லுாரி ஆரோக்கிய கீர்த்தி மூன்றாமிடம் பெற்றனர்.
78 கிலோ பிரிவில் பி.எம்.டி., கல்லுாரி நேஹா முதலிடம், அமெரிக்கன் கல்லுாரி ஆர்த்தி இரண்டாமிடம், ஜி.டி.என். கல்லுாரி மூன்றாமிடம் பெற்றனர். 78 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் ஜி.டி.என். கல்லுாரி ஹரிணி முதலிடம், லேடிடோக் கல்லுாரி ப்ரவீணா இரண்டாமிடம், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி கிரேஸ் ரேச்சல் மூன்றாமிடம் பெற்றனர். மதுரை லேடிடோக் கல்லுாரி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.