ADDED : ஆக 31, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் பலநோக்கு மைய கட்டடம் பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது.
இங்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2011ல் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பலநோக்கு மையக் கட்டடம் அமைக்கப்பட்டது. திருமணம், காதணிவிழா, சமூக கூட்டங்கள் நடைபெறும் சமுதாயக் கூடமாகவும் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில் பராமரிப்பின்றி துாண்கள் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மாடிக்குச் செல்லும் வழியில் செடி, கொடிகள் முளைத்து புதராக காட்சியளிக்கிறது. கதவுகள், ஜன்னல்கள் துருப்பிடித்து சேதமடைந்துள்ளன.
தரையில் பதித்துள்ள 'டைல்ஸ்' கற்கள் உடைந்து காயம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சமுதாயக்கூடத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.