/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பராமரிப்பில்லாத பாண்டியன் நகர் பூங்கா
/
பராமரிப்பில்லாத பாண்டியன் நகர் பூங்கா
ADDED : மார் 06, 2024 05:48 AM

திருப்பரங்குன்றம், : மாநகராட்சி 95வது வார்டு பாண்டியன் நகரிலுள்ள பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பதால் சிறுவர்கள் முதல் வயதானோர் வரை சிரமம் அடைகின்றனர்.
பூங்காவுக்குள் இருக்கும் சாதனங்கள் சேதம் அடைந்துள்ளதால் சிறுவர்கள் விளையாட முடியவில்லை.
இரு இடத்தில் மட்டும் சோலார் மின்விளக்கு எரிகின்றன. மற்ற இடங்களில் எரியாததால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பூங்காவுக்குள் வர மக்கள் அச்சப்படுகின்றனர். பூங்கா நடைமேடையை பயன்படுத்த முடியவில்லை.
குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப வசதியில்லை. அதனால் செடி, கொடிகளுக்கு தண்ணீர் விட முடியாமல் காய்ந்து கிடக்கின்றன.
பூங்கா முழுவதும் மரங்கள் உதிர்த்த இலைகள் காய்ந்து கருகி பரவிக் கிடக்கின்றன. செயற்கை நீரூற்று செயல்பாடின்றி உள்ளது. இரவு நேரங்களில் மது பிரியர்களின் புகலிடமாக மாறி வருகிறது.
கவுன்சிலர் இந்திரா காந்தி கூறுகையில், ''இரண்டு சோலார் விளக்குகள் அமைத்துள்ளோம். பராமரிப்பதற்காக மேயரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பூங்காவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

