ADDED : அக் 17, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் பராமரிப்பின்றி சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன.
இங்குள்ள வட்டார கல்வி அலுவலகம் அருகே உள்ள பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவ்வளாகத்தில் உள்ள அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்ததால் வகுப்பறையில் மையம் செயல்படுகிறது. இதன் எதிரே நான்கு வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. இந்நிலையில் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களின் வராண்டா மேல் முகப்பு சிலாப்பின் பூச்சுகள் முழுதும் பெயர்ந்து விழுந்தும், விழும் நிலையிலும் உள்ளன. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள், பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே பள்ளி கட்டடத்தை பராமரிக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.