ADDED : ஜூன் 01, 2025 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே வி.கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
அப்பகுதி நாமகோடி கூறியதாவது: இப்பள்ளியில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு பாதுகாப்பாக இருந்தது. 2 மாதங்களுக்கு முன்பு பழைய கட்டடத்தை இடிக்க, வாகனம் உள்ளே செல்ல சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டது. இது குறித்து கேட்டபோது, 'மீண்டும் கட்டப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வரை கட்டப்படாததால் இரவில் மது அருந்தவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. பள்ளி பொருட்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.