ADDED : மார் 17, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் மந்தைக்களம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது.
வகுப்பறை கட்டடம் அருகே இரண்டு கழிப்பறை கட்டடம் மேல் இருந்த பிளாஸ்டிக் தொட்டி திருடுபோனது. அந்த இடத்தில் செடிகள் படர்ந்துள்ளன. விஷபூச்சிகள் வருகின்றன. பிளாஸ்டிக் குழாய்கள் திருடு போயின. பழுதடைந்த சமையலறை கட்டடம், பள்ளி வளாகம் புதர்மண்டி இருப்பதால் விஷப் பூச்சிகள் உலா வருகின்றன. புதிய சமையலறை கட்டடம் கைகழுவுமிடத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாய்களை திருடி உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் கட்டட கழிவுகளை அகற்ற இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை மீண்டும் கட்டவில்லை. இதனால் பள்ளி வளாகம் தனியார் வாகன 'பார்க்கிங்' ஆக மாறிவிட்டது. மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.