/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்
/
பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்
ADDED : செப் 18, 2025 05:24 AM

வாடிப்பட்டி : சமயநல்லுார் ஊராட்சியில் பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகத்தால் அரசு நிதி வீணாடிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள போலீஸ் ஸ்டேஷன், ஆர்.சி., பள்ளி ரோட்டில் கடந்த 2021ல் ரூ.5.25 லட்சத்தில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் 4 ஆண்டுகளாக கழிப்பறை பூட்டி கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்த ரோட்டில் தான் ஞாயிற்றுக்கிழமையில் வாரச்சந்தை நடக்கும். இங்கு வியாபாரத்திற்கு வருவோர் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரம் பாதிக்கிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.