/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊரக வளர்ச்சி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்
/
ஊரக வளர்ச்சி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்
ஊரக வளர்ச்சி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்
ஊரக வளர்ச்சி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 23, 2025 04:02 AM

மதுரை : மதுரையில் ஊரக வளர்ச்சி, சி.ஐ.டி.யு., உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., நகர் செயலாளர் அரவிந்தன் வரவேற்றார். ஊராட்சி வளர்ச்சி சங்க செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசியதாவது: அரசே ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். மேல்நிலைத்தொட்டி ஆப்பரேட்டர்கள், துாய்மை காவலர்கள், டெங்கு ஒழிப்பு பாதுகாப்பு, துப்புரவு பணியாளர்களுக்கு 2017ல் நிறுத்திய நிலுவைத் தொகை, இறந்தவர்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும்.
அனைத்துப்பிரிவு தொழிலாளர்களுக்கும் பொங்கல் கருணைத் தொகை கொடுக்க வேண்டும். ஒத்தக்கடை, கருப்பாயூரணி உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சி வார்டாக மாற்றும் போது அங்கே பணிபுரியும் ஊழியர்களுக்கு மாநகராட்சி ஊதியம் வழங்க வேண்டும். மே 20ல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.
பொருளாளர் மூர்த்தி, தலைவர் எம். கண்ணன், சி.ஐ.டி.யு., நகர் தலைவர் செ. கண்ணன், துணைச் செயலாளர்கள் பொன்ராஜ், காளிராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். உள்ளாட்சி மாநில உதவித் தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

