/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்
/
மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 14, 2024 04:35 AM
மேலுார் : மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
மேலுார் பகுதியில் பெரியாறு, வைகை தண்ணீரை ஒரு போக பாசனத்திற்கு தாமதமாக திறந்ததாலும், பருவமழை சரிவர பெய்யாததாலும் நெல் பயிரிட முடியவில்லை. எனவே, மேலுாரை வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும். புதுசுக்காம்பட்டி சிறுமேளம் கண்மாயில் தண்ணீர் நிறைந்திருந்தும், தண்ணீர் வெளியேற 'கலுங்கு' இல்லாததால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை.
நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஒத்தப்பட்டி, திருவாதவூர், புதுப்பட்டியில் கண்மாயை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என குற்றம்சாட்டினர். கூட்டத்தில் கிருஷ்ணன், மணி, பழனிச்சாமி, சாகுல்ஹமீது, துரைசிங்கம், பாண்டி பங்கேற்றனர்.

