/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துணைத் தலைவர் தலைமையில் உசிலம்பட்டி நகராட்சி கூட்டம்
/
துணைத் தலைவர் தலைமையில் உசிலம்பட்டி நகராட்சி கூட்டம்
துணைத் தலைவர் தலைமையில் உசிலம்பட்டி நகராட்சி கூட்டம்
துணைத் தலைவர் தலைமையில் உசிலம்பட்டி நகராட்சி கூட்டம்
ADDED : ஏப் 17, 2025 06:25 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் துணைத்தலைவர் தேன்மொழி தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
உசிலம்பட்டியில் நகராட்சி தலைவராக தி.மு.க., வைச் சேர்ந்த சகுந்தலா, கட்சித்தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு அ.தி.மு.க., அ.ம.மு.க., கவுன்சிலர்கள் உதவியுடன் வெற்றி பெற்றார். பின்னர், தி.மு.க. வில் இருந்து விலகி அ.தி.மு.க., வில் சேர்ந்தார்.
இந்த நிலையில் நகராட்சி சட்ட விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டார் என அவரை பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சித்தலைவர் அறை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
தலைவரை பணிநீக்கம் செய்ததால், துணைத்தலைவரான காங்., கவுன்சிலர் தேன்மொழி தலைமையில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கமிஷனர் சக்திவேல், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'வார்டு பிரச்னைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய போதுமான நிதி இல்லை என கமிஷனர் கூறுகிறார். ஆனால் அலுவலகம் சம்பந்தமான பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்குகிறார். அலுவலகத்திற்கு தேவையான பில் புக் போன்றவற்றை, கவுன்சிலர்கள் நாங்களே பிரின்ட் செய்து தருகிறோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பூரிப்பில் துணைத்தலைவர்
கடந்த கூட்டத்தில், தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை. நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிப்பதில்லை. எனவே, கவுன்சிலர்களுடன் அமர்ந்து கொள்கிறேன்' என்றார். அவரை சமாதானம் செய்தபின் மேடையில் சென்று அமர்ந்தார்.
ஆனால், நேற்றைய கூட்டம் அவரது தலைமையில் நடந்ததால் மகிழ்ச்சியடைந்தார். கவுன்சிலர்களும் அவரது தலைமையில் கூட்டம் நடப்பதால், வாக்குவாதங்களைத் தவிர்த்து அவருக்கு ஒத்துழைத்தனர்.