/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரத்ததானத்தை ஊக்குவிக்க 'உதிரம்' மாரத்தான் போட்டி
/
ரத்ததானத்தை ஊக்குவிக்க 'உதிரம்' மாரத்தான் போட்டி
ADDED : நவ 25, 2024 05:19 AM
மதுரை : மதுரை மருத்துவக் கல்லுாரி ரத்ததான குழுசார்பில், 'உதிரம்' - மாரத்தான் போட்டி நடந்தது.
ரத்ததானத்தை ஊக்குவிக்க நடந்த போட்டிக்கு டீன் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்தார். போலீஸ் கமிஷனர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில், வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி டீன் ரத்தினவேல், மதுரை மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் மல்லிகா, டாக்டர்கள் சிந்தா, தானப்பன், அன்பரசன் பங்கேற்றனர்.
10 கி.மீ.,. துார போட்டி மதுரை மருத்துவக் கல்லுாரியில் துவங்கி அரவிந்த் கண் மருத்துவமனை, வைகை கரை ரோடு, தெப்பக்குளம் சந்திப்பு, அப்போலோ மருத்துவமனை, பூ மார்க்கெட், கே.கே.நகர் ஆர்ச், ராஜா முத்தையா மன்றம், காந்தி மியூசியம் வழியாக மருத்துவக் கல்லுாரியில் நிறைவடைந்தது. ஆண், பெண்களுக்கென தனியாக நடந்த போட்டிகளில் 1,513 பேர் பங்கேற்றனர்.
பொது மக்கள் - ஆண்கள் பிரிவில் சுகுமார், ரஞ்சித் குமார், ஷகுன் குமார் முதல் மூன்று இடங்களையும், பெண்கள் பிரிவில் சப்னா படேல், கோமல், வினிதா முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர். முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், 2ம் பரிசு ரூ. 7 ஆயிரம், 3ம் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது.
மருத்துவ மாணவர்கள் - ஆண்கள் பிரிவில் ஜெகதீஸ்வரன், ப்ரசித், பூவரசன் முதல் மூன்று இடங்களையும், பெண்கள் பிரிவில் மோனிஷா, ஷாமினி, ஷிவானி முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர். முதல் பரிசு ரூ. 3 ஆயிரம், 2ம் பரிசு ரூ. 2 ஆயிரம், 3ம் பரிசு ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது.
இளையோர் - ஆண்கள் பிரிவில் சுகந்த், பெண்கள் பிரிவில் சுபஸ்ரீ தலா ரூ. 2 ஆயிரம் வென்றனர். மூத்த குடிமக்கள் பிரிவில் கணேஷ், ஜவஹர் தலா ரூ. 2 ஆயிரம் வென்றனர். மூன்று முகாம்களிலும் 944 யூனிட் ரத்தம் தானமாக பெற்று அமெரிக்கன் கல்லுாரி கோப்பை வென்றது.