ADDED : பிப் 20, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை,: தமிழறிஞர் உ.வே.சாமிநாத அய்யர் பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை தல்லாகுளத்தில் உள்ள சிலைக்கு தாம்ப்ராஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாநில துணைத் தலைவர் இல.அமுதன் தலைமை வகித்தார். துணைப்பொதுச் செயலாளர் பக்தவத்சலம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் ரகுநாதன், சிவா, அன்புசர்மா, சமூக ஆர்வலர் மணி பங்கேற்றனர்.

