/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜூலை 21 - செப்.28 நாய்களுக்கு தடுப்பூசி முகாம்
/
ஜூலை 21 - செப்.28 நாய்களுக்கு தடுப்பூசி முகாம்
ADDED : ஜூலை 17, 2025 12:37 AM
மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கை பணியாக 100 வார்டுகளிலும் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் ஜூலை 21 முதல் செப். 28 வரை நடத்தப்படவுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விலங்குகளால் பாதிக்கப்பட்ட 1874 பேருக்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகமாக நாய்க் கடிக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அதிக நாய்கள் உள்ள தெருக்களில் இம்முகாம் நடத்தி முதல் தவணையாக 5 ஆயிரம் (ஏ.ஆர்.வி.,) நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒப்பந்த, தொண்டு நிறுவனங்கள் மூலம் மாநகராட்சி பணியாளர்கள் நேரடியாக தடுப்பூசி போட உள்ளனர். இம்முகாம் தினமும் காலை 6:00 - 10:00 மணி வரை நடக்கும்.

