ADDED : ஜூன் 10, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் நகரில் 532 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து நாய்களும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு கமிஷனர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சிக்கந்தர், வனஜா ஆகியோர் முன்னிலையில் டாக்டர் ஜோசப் அய்யாதுரை தடுப்பூசி போட்டார்.நாய்களுக்கு உணவு வழங்க வி.டி.ஜே., யூனியன் கிளப் சார்பில் ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது.