ADDED : ஜன 03, 2026 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சியில் திருவள்ளுவர் நகர், கீழப்புதுார், சந்தை திடல், வண்ணாரப்பேட்டை, தேனி ரோடு, பேரையூர் ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் என பல பகுதிகளில் தெருநாய்கள் அதிகரித்துள்ளன.
கடந்தாண்டு 250 தெருநாய்கள் இருப்பதாக கணக்கிட்டனர். எந்நேரமும் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நேற்று நாய்களுக்கு நகராட்சி சுகாதார ஆய் வாளர் சிவக்குமார் தலைமையில் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

